எலக்ட்ரானிக் தராசுகள் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் எலக்ட்ரானிக் தராசுகள் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.

Update: 2022-06-28 17:50 GMT

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் எலக்ட்ரானிக் தராசுகள் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் லலிதா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

ராஜேந்திரன்:- மேட்டூர் அணை திறந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மண்ணியாற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கோபிகணேசன் (தலைவர், காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம்):- குறுவை தொகுப்பு திட்டம் ஒரு ஏக்கருக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது பயனளிக்காது. கடந்த ஆண்டு போல் 2½ ஏக்கருக்கு உரங்கள் வழங்க வேண்டும். தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரத்தட்டுப்பாடு

பாண்டுரங்கன்:- உரத்தட்டுப்பாடு காரணமாக பயிர்களுக்கு உரம் தெளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வரதராஜன்:-புதுமண்ணியாற்றின் தலைப்பில் வைரவன் இருப்பு பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும். மயில்களால் நெற்பயிர்கள் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. வனத்துறை மூலம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பழகன்:- ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எலக்ட்ரானிக் தராசு

வீரராஜ்:- ஒழுங்குமுறை விற்பனைகூடங்களில் முறைகேடுகளை தடுக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

கலெக்டர் லலிதா:- ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எலக்ட்ரானிக் தராசுகள் மூலம் சரியான எடையில் பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண் இணை இயக்குனர் சேகர் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்