இளையான்குடி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி இளையான்குடி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த. நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் அல் அமீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோசப் வளவன், கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார தலைவர் ராஜு, எஸ்.டி.பி.ஐ. தாஹீர் ஜமான், ம.தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் காயாம்பு, மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜன், சட்ட திட்ட குழு உறுப்பினர் சிற்பி தியாகராஜன், சிவகங்கை நகர் கழகச் செயலாளர் வக்கீல் முத்துசாமி, தீபன் சக்கரவர்த்தி, மாவட்ட பொருளாளர் சார்லஸ், மாவட்ட தலைவர் கருப்பூர் சந்திரன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சகாதேவன், சிவகங்கை ஒன்றிய செயலாளர் முல்லை முத்து, காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் வீரய்யா, தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகம்மது மகாதீர், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.