ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-09-09 20:49 GMT

திருமங்கலம்

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் வருகிற 15-ந்தேதி நடைபெறும் மாநாடு தொடர்பாக திருமங்கலத்தில் ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைதொடர்ந்து திருமங்கலம் நகரில் சந்தைபேட்டை, குதிரைசாரிகுளம், .மறவன்குளம். பி.சி.எம்.நகர், காந்தி சிலை தெரு பகுதிகளில் நகர செயலாளர் அனிதா பால்ராஜ் முன்னிலையில் மாவட்ட அவைத்தலைவர் சக்தி வேல் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜெயராமன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜவஹர், ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், திருப்பதி, திருமங்கலம் நகர தலைவர், சிவணான்டி, மாவட்ட பிரதிநிதி சீனிவாசன், நகர துணை செயலாளர்கள் கணேசன், மாரிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்