அம்மா உணவகத்தில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு

அம்மா உணவகத்தில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-17 19:29 GMT

நாகர்கோவில்:

அம்மா உணவகத்தில் மேயர் மகேஷ் திடீர் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று மதியம் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு வினியோகம் செய்யப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும் உணவருந்த வருபவர்கள் பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ரசீது கொடுக்காமல் முறைகேடாக உணவு வினியோகம் செய்ததும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் உணவு வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் உணவு பொருட்கள் இருப்பையும் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது பதிவேட்டின்படி இருக்க வேண்டிய அளவைவிட பல மடங்கு உணவு பொருட்கள் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த உணவக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நல அதிகாரி ராம்மோகனிடம், மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

மேயரின் திடீர் ஆய்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆய்வின்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் அருள்பிரகாஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்