ரவுண்டானா பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு

தூத்துக்குடியில் ரவுண்டானா பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-28 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வி.இ. ரோட்டில் போக்குவரத்து அதிகமாக இருப்பதாகவும், இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அந்த சாலை மாநகராட்சி சார்பில் அகலப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது அந்தப் பகுதியில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்