சாலை பணிகளை மேயர் ஆய்வு
வேலூரில் சாலை பணிகளை மேயர் சுஜாதா ஆய்வு செய்தார்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று 50-வது வார்டு ராஜீவ்காந்திநகர் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ராஜீவ்காந்திநகர், அண்ணாநகர் பகுதியில் 7 தெருக்களில் புதிதாக சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.23 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆய்வின் போது கவுன்சிலர் அருணாவிஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.