மயிலாடுதுறை இளைஞர்கள் 15 ஆயிரம் கி.மீட்டர் மோட்டார்சைக்கிள் பயணம்

மயிலாடுதுறை இளைஞர்கள் 15 ஆயிரம் கி.மீட்டர் மோட்டார்சைக்கிள் பயணம்

Update: 2022-09-03 17:15 GMT

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையை சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் 15 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர்.

மயிலாடுதுறை இளைஞர்கள்

இந்தியாவில் தினமும் நடைபெறும் சாலை விபத்துக்களில் பெரும்பான்மையானோர் தலைக்கவசம் அணியாதது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததன் காரணமாகவே உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையை சேர்ந்த முத்துக்குமார் (வயது30), வெங்கட்ராமன் (30) ஆகிய 2 பைக் ரைடர்கள் மோட்டார் சைக்கிளில் 60 நாட்களில் 15 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு மயிலாடுதுறையில் இருந்து லடாக் சென்று, மீண்டும் மயிலாடுதுறை திரும்ப திட்டமிட்டு புறப்பட்டுள்ளனர்.

ேமாட்டார்சைக்கிள் பயணம்

மயிலாடுதுறையில் தொடங்கி காரைக்கால் வழியாக கன்னியாகுமரி, கேரளா, கோவா, மும்பை, ராஜஸ்தான், ஜம்மு, ஸ்ரீநகர், கார்கில் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இவர்களது பயணம் சென்று முடிவடைகிறது. திரும்பவும் மோட்டார்சைக்கிளிலேயே டெல்லி, ஆக்ரா, நாக்பூர், ஐதராபாத், சென்னை வழியாக மயிலாடுதுறை வந்தடைய திட்டமிட்டுள்ளனர்.

கேக் வெட்டி வழி அனுப்பப்பட்டது

இவர்கள் யூடியூப் வாயிலாக ஒவ்வொரு பகுதியில் உள்ள இளைய தலைமுறைகளின் உதவியுடன் அந்தந்த பகுதிகளில் வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். மயிலாடுதுறைலிருந்து புறப்பட்ட இளைஞர்களுக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்