ஆழியாற்றங்கரையில் நள்ளிரவில் மயான பூஜை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை யொட்டி ஆழியாற்றங்கரையில் நள்ளிரவில் மயான பூஜை நடை பெற்றது. இதில் கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-02-04 18:45 GMT

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை யொட்டி ஆழியாற்றங்கரையில் நள்ளிரவில் மயான பூஜை நடை பெற்றது. இதில் கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாசாணியம்மன் கோவில்

கோவை மாவட்டம் ஆனைமலையில் கொங்கு நாட்டு காவல் தெய்வமாக விளங்கி வரும் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

குண்டம் திருவிழாவையொட்டி மயான பீட நாயகி யான மாசாணியம்மனுக்கு ஆண்டு தோறும் நள்ளிரவில் மயான பூஜை நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நேற்று நள்ளிரவில் ஆழியாற்றங்கரை யில் நடந்தது. இதற்காக அங்கு பீடம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மயான பூஜை

இதையடுத்து தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் அம்மன் அருளாளி அருண் மற்றும் நூற்றுக்கணக்கான முறைதா ரர்கள் திருஆபரணப் பெட்டியில் பூஜை பொருட்கள் எடுத்து கொண்டு முன்செல்ல பக்தர்கள் படைசூழ மயான பூஜை நடைபெறும் ஆழியாற்றங்கரையில் உள்ள பீடத்துக்கு வந்தனர்.

அங்கு மயான மண்ணில் சயன கோலத்தில் மாசாணியம்மன் உருவம் செய்யப்பட்டது. அதற்கு பட்டு உடுத்தி சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் ஆழியாற்றில் புனிதநீராடி பம்பை இசை முழுங்க, மயானத்தில் உருவாக்கப்பட்டு இருந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அம்மன் அருளாளி

இதைத்தொடர்ந்து அருள் வந்து கையில் சூலாயுதத்துடன் அம்மன் அருளாளி அருண் ஆடினார். அப்போது மழை பெய்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் பக்தர்கள் நனைந்தவாறு மாசாணித்தாயே, மயான பீட நாயகியே வேண்டுதல்களை நிறைவேற்ற வருவாயாக என்று பக்தி கோஷ மிட்டனர்.

அம்மன் அருளாளி அருண் மயானத்தில் இருந்த அம்மன் உருவாரத்தை சிதைத்து எலும்பை கவ்வியடி பிடிமண் எடுத்து, அம்மன் பட்டு சேலையில் பத்திரப்படுத்தினார். மேலும் எலும்பு களை வாயில் கவ்வியபடி ஆழியாற்றங்கரையில் இருந்து உப்பாற் றங்கரைக்கு சென்றார். அப்போது அவருடன் முறைதாரர்கள், பக்தர்கள் சென்று புனித நீராடினார்கள்.

கொட்டும் மழையில் வழிபாடு

இதைத்தொடர்ந்து கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடை பெற்றது. மேலும் மயான பூஜையில் எடுக்கப்பட்ட பிடிமண் மூலம் சக்தி கும்பஸ்தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆழியாற்றங்கரை மயானத்தில் விடிய, விடிய நடந்த மயான பூஜையில் மழையையும் பொருட்படுத்தாமல் பெண் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.

மயான பூஜையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர் கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் பிரியங்கா, ஏ.எஸ்.பி.பிருந்தா தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க குமார், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க துணை சூப்பிரண்டு கீர்த்தி வாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப் -இன்ஸ்பெக்டர் கவுதம், செல்வராஜ், முருகவேல் மற்றும் ஊர்க் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

மேலும் இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆனைமலைக்கு விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் சித்திர தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா, இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல், வாணவேடிக்கையுடன் நடைபெறுகிறது. 

மேலும் செய்திகள்