மயிலம் மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலம் மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-03 18:45 GMT

மயிலம், 

மயிலம் தொகுதி கீழ்மயிலத்தில் மணல் ஏரி கரையை யொட்டி பிரசித்தி பெற்ற சப்த கன்னி மயிலியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1-ந்தேதி விநாயகர், பாலசித்தர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி சன்னதிகளின் வழிபாடு, ரங்கநாயகி உடனுறை ரங்கநாதர் கோவில் வழிபாடு உள்ளிட்ட பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் கோ பூஜை, 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை, விசேஷ சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, யாத்ராதானம் நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்ட ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் பொதுமக்கள் செய்து செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்