வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு
வனபத்ரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் 9-வது நாளான நேற்று காலை 8 மணி, மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைஇ தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நெல்லித்துறை, அம்மன் நகர், வேல்நகர், காந்திநகர், கூடுதுறை மலை, அண்ணா நகர், சமயபுரம், உப்பு பள்ளம் ஆகிய கிராம மக்கள் தாரை, தப்பட்டை முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.