முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை
முத்தாரம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலசந்தி பூஜை, உச்சிகால பூஜை, மணிக்கு சாயரட்சை பூஜை, இரவில் 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான தீபாராதனை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.