மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரியும், பெண்களை நிர்வாணமாக வீதியில் இழுத்துச்சென்று பாலியல் கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சிறுபான்மை மலைவாழ்மக்களை பாதுகாக்கக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் காந்தி சிலை முன் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் திலகவதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிருந்தா, பொருளாளர் துளிசிமணி, துணை செயலாளர் தமிழரசி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் காந்தி சிலைக்கு மனு கொடுத்து முறையிட்டனர். இதில் திரளான பெண்கள்கலந்து கொண்டனர்.