சுற்றுலா பயணிகளை 'குறி' வைத்து கொடைக்கானல் பகுதியில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அனுமதியின்றி செயல்படுகிற மசாஜ் சென்டர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக தாசில்தார் முத்துராமன் தலைமையில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கொடைக்கானல் மாப்பிள்ளை முதலியார் தெருவில் உள்ள தனியார் விடுதியில் இயங்கிய மசாஜ் சென்டரை நேற்று பூட்டினர். இதனால் அந்த பகுதியில் குடியிருப்புகளில் வசிக்கிற பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.