புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி
சுப்பிரமணியபுரம் கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா, அஞ்சுகோட்டை ஊராட்சி, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட அடைக்கல அன்னை ஆலயம் மற்றும் ஆரோக்கிய அன்னையின் அற்புத கெபி திறப்பு விழா நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் திறந்து வைத்து அர்ச்சிப்பு செய்தார்.
அதனை தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியை முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் அஞ்சுகோட்டை பங்குத்தந்தை அன்பு ஆனந்தராஜ் மற்றும் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர். முன்னதாக கிராம மக்கள் சார்பில் ஆயருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தல அதிபர் ஆல்பர்ட் முத்துமாலை, அருட்தந்தையர்கள் இருதயராஜ், எட்வர்ட், தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் அருட்தந்தை வசந்த், இல்ல அதிபர் பீட்டர் லூயிஸ், சூசை மாணிக்கம், பால்ராஜ் உள்பட ஏராளமான அருட்தந்தையர்கள், இறைமக்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.