மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார் கைது

மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-20 18:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், புதுநடுவலூரை சேர்ந்தவர் மருதுதுரை (வயது 36), கொத்தனார். இவருக்கு மலர்கொடி (27) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சம்பவத்தன்று மலர்கொடியை மருதுதுரை தாக்கியதோடு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மலர்கொடி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக மலர்கொடி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து மருதுதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்