சென்னையில் மாஸ்க் கட்டாயம் - மாநகராட்சி உத்தரவு

சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை பெருநகரமாநாகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2022-07-04 07:21 GMT

சென்னை,

சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.

வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநாகராட்சி கூறியுள்ளது.

மேலும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்