வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போராட்டம்
இளையான்குடியில் வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி கீழாயூர் காலனியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் தாலுகா செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது. கீழாயூர் கிளைச் செயலாளர் பரிசுத்த மங்களசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தண்டியப்பன், செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, ஜெயந்தி, தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் மலைராஜ், சந்தியாகு, செந்தில்குமார், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் 2006-ல் ரத்து செய்யப்பட்ட பட்டாவுக்கு மீண்டும் பட்டா வழங்க வேண்டும். பட்டா இல்லாததால் அரசு தரும் சலுகைகள் பெற முடியவில்லை என்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு, வீட்டு வரி, கடன் பெறுவது, மத்திய அரசின் பசுமை வீடுகள், குடிநீர் இணைப்பு, சாலை வசதி, சாக்கடை வசதி போன்றவைகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது. குடியிருப்பவர்களின் நலன் கருதி உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.