மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கீழ்கொடுங்காலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-02-28 12:22 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வந்தவாசி வட்டாரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் மங்கலம் மாமண்டூர் கூட்டுச் சாலையில் நடைபெற்றது.

வட்டாரக்குழு உறுப்பினர் இரா.சேட்டு தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், வட்டாரச் செயலாளர் அ.அப்துல்காதர், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்டச் செயலாளர் கி.பால்ராஜ், ஓய்வுபெற்ற மின் ஊழியர் சங்க நிர்வாகி இரா.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்