மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-09 18:57 GMT

ஆவுடையார்கோவில் கடைவீதி, மேலவீதி முக்கத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புண்ணிய வயல் கிராமத்தில் நன்செய் நிலத்தில் சாகுபடி செய்துள்ள நெற் பயிரை அழித்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்