மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் கிராமத்தில் உள்ள மாடுகளை உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காத காரணத்தால் அந்த மாடுகள் ஆவுடையார்கோவில் கடை வீதியில் சாலைகளில் சுற்றி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சென்று மேய்கிறது. இதனால் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ளதை பாதுகாத்து தரக்கோரி வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். இதில் சுப்பிரமணியன், தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.