தியாகி விசுவநாததாஸ் நினைவு தினம்
தூத்துக்குடியில் தியாகி விசுவநாததாஸ் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
விடுதலைப் போராட்ட வீரர் சமூகநீதி போராளி எஸ்.எஸ்.விசுவநாத தாஸ் 82-வது நினனவு அஞ்சலி நிகழ்ச்சி மருத்துவர் முடி திருத்துவோர் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட தியாகி விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் ஆர்.ரசல், சங்க தலைவர் டென்சிங், கவுரவ தலைவர் கே.சதாசிவம், சங்க பொருளாளர் கே.வேல்முருகன், ஆறுமுகம், மணவாளன் சங்க பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.