தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம்
சுரண்டையில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கத்தில் தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நாடார் வாலிபர் சங்க புரவலரும், தொழிலதிபருமான எஸ்.வி.கணேசன், சங்கரலிங்கனார் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
நாடார் வாலிபர் சங்க தலைவர் ஏ.கே.எஸ்.ஜெயக்குமார், சங்க செயலாளர் கே.டி.பாலன், நிர்வாக கமிட்டி நிர்வாகிகள் ஆர்.வி.ராமர், ஜி.எஸ்.எஸ். அண்ணாமலைகனி, கணபதிமுருகன், சி.எம்.சங்கர், துணை செயலாளர் டி.ஜெகன், கோகுல் கண்ணன், எம்.எஸ்.அய்யப்பன், செயற்குழு உறுப்பினர் டி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.