10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Update: 2022-12-04 18:46 GMT

அவினாசி, டிச.5-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் 25 ஜோடி வீதம் 20 மண்டலங்களிலும் மொத்தம் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மண்டலத்தில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 2 கிராம் தாலி, மாலை, புத்தாடை, குத்துவிளக்கு, சமையல் அடுப்பு, கிரைண்டர், மிக்சி, குக்கர், ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள், இட்லி பாத்திரம், 3 சில்வர் பாத்திரம், அண்டா, 3 கரண்டி, அஞ்சறைப்பெட்டி, சோம்பு, 2 டம்ளர்கள், வடைக்கல், 2 டிபன் பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள் பாயுடன் கூடிய மெத்தைகள், இரண்டு போர்வை, இரண்டு தலையணை ஆகிய சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுறை, உதவி ஆணையர் செல்வராஜ், அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்