மார்க்க சகாய சாமி கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா

மூவலூர் மார்க்க சகாய சாமி கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா நடந்தது.

Update: 2023-03-31 18:56 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே உள்ள மூவலூர் கிராமத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மங்கள சவுந்தரநாயகி மார்க்க சகாய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோபூஜை, யாக பூஜைகள், சாமி அம்பாள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 5-ம் நாள் விழாவான சகோபுர தரிசனம் எனப்படும் சப்பர திருவிழா நடந்தது. முன்னதாக கோவிலில் சாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ரிஷப வாகனத்தில் சாமி சப்பரத்துக்கு எழுந்தருளினர். பின்னர் சாமி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்