அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சந்தை

வந்தவாசியில் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் சந்தை அமைக்கப்பட்டது.

Update: 2023-02-16 13:31 GMT

வந்தவாசி

வந்தவாசியில் திண்டிவனம் ரோட்டில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் மாவட்ட விற்பனை சங்கமும் அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியும் இணைந்து கல்லூரி சந்தை - 2023 என்ற நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி நிறுவனர் பா.முனிரத்தினம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மு.ரமணன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சி.ருக்மணி குத்துவிளக்கு ஏற்றி கல்லூரி சந்தையை தொடங்கி வைத்து வரவேற்றார்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் (வாழ்வாதாரம்) ஜான்சன், சந்திரகுமார், வெங்கடேசன் மற்றும் வில்லியம் சகாயம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் தாங்கள் தயார் செய்த பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்தனர்.

இச்சந்தையில் மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியைகள் பார்த்து பொருட்களை வாங்கி சென்றனர். முடிவில் மகளிர் வட்டார இயக்க மேலாளர் சாந்தி நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிகவியல் பேராசிரியை கே.ரம்யா மற்றும் மாணவிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்