ஈரோடு மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலை உயர்வு

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது.

Update: 2022-09-13 21:45 GMT

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது.

காய்கறி மார்க்கெட்

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சில்லரை வியாபாரமும், மொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒட்டன்சத்திரம், மேச்சேரி, தாளவாடி, ஊட்டி, மேட்டுப்பாளையம், ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரத்தை காட்டிலும், காய்கறிகளின் விலை உயர்ந்துவிட்டது.

விலை உயர்வு

ஒரு கிலோ கேரட் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கத்திரிக்காய் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100 வரை விற்பனையானது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

பீன்ஸ் - ரூ.80, பீட்ரூட் - ரூ.60, சவ்சவ் - ரூ.30, குடைமிளகாய் - ரூ.60, தக்காளி - ரூ.40, பீர்க்கங்காய் - ரூ.60, முள்ளங்கி - ரூ.40, வெண்டைக்காய் - ரூ.40, முருங்கைக்காய் - ரூ.60, சின்ன வெங்காயம் - ரூ.25, பெரிய வெங்காயம் - ரூ.40, இஞ்சி - ரூ.70, முட்டைகோஸ் - ரூ.25.

Tags:    

மேலும் செய்திகள்