வரத்து குறைந்ததால்முள்ளங்கி விலை கிலோவிற்கு ரூ.6 உயர்வுதர்மபுரி உழவர் சந்தையில் ரூ.10-க்கு விற்பனை
ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான முள்ளங்கி தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக முள்ளங்கி விலை குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.4-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்து குறைந்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.6 விலை உயர்ந்தது.
தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ முள்ளங்கி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.15 வரை பல்வேறு விலைகளில் விற்பனை ஆனது. முள்ளங்கி விலை சற்று உயர்ந்திருப்பதால் அதை பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.