மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-09-07 19:14 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். அதன்படி கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகு விமரிசையாக தொடங்கியது. யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க மகா மாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியர்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். கோவில் கலசத்துக்கு ஊற்றப்பட்ட புனித நீர் பின்னர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்