மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எச்சம்பட்டி அருகே மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.;
ராயக்கோட்டை
ராயக்கோட்டை அருகே உள்ள எச்சம்பட்டி பழமை வாய்ந்த மண்டு மாரியம்மன் கோவில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள், நீர்த்தக்குட ஊர்வலம், பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை, சாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் எச்சம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.