முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி

முதுகுளத்தூரில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-04-07 18:45 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா மற்றும் மத நல்லிணக்க விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசுப்பணியாளர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இப்போட்டியானது முதுகுளத்தூர் நீதிமன்றம் வளாகத்தில் இருந்து தொடங்கி ஏனாதி பூங்குளம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் இரண்டு பிரிவாக நடந்தது.

போட்டியை மாநில தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சுரேஷ்தேவர், மாவட்ட துணை செயலாளர் முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்