மாரத்தான் ஓட்டம்

75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புபடை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

Update: 2022-08-14 18:07 GMT


75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புபடை சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

பயிற்சி

75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்தோதிபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியை பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆச்சல் சர்மா தொடக்கி வைத்தார்.

பாராட்டு

மைதானத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில், இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் துணை கமாண்ெடன்ட், வீரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்