மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா
தெற்கு ஆத்தூர் அருகே மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் அருகே உள்ள மரந்தலை மாடசாமி கோவில் கொடை விழாவில் கடந்த மாதம் 15-ந் தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடந்த 28-ந் தேதி குடிஅழைப்பு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் மகா கணபதி ஹோமம், காலையில் சிற்றாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், பகலில் சிறப்பு பூஜை, இரவில் வில்லிசை, சாம கொடை, சிறப்பு வாணவேடிக்கை நடைபெற்றது.
பக்தர்கள் சாமி தரிசனம்
நேற்று காலை 8 மணி அளவில் கோவிலில் பக்தர்கள் பால் பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொங்கல் பானை வைத்து பொங்கல் இட்டனர். 10 மணிக்கு நேமிச கிடாய்கள் தண்ணீர் தெளித்தல் மற்றும் செலவளித்தல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு மதிய ெகாடை நடைபெற்றது.
இதில் மேல ஆத்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, புதுப்பட்டி, சிவகாசி, சென்னை, தேனி, கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 3 நாட்களும் கோவிலில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் சென்னை தொழிலதிபர் மேலாத்தூர் எஸ்.என். ஜெயமுருகன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் ஏ.பி.சதீஷ்குமார், சி.வீரக்குமார், ஏ.ராஜகோபால் நாடார், எஸ்.போத்தி மகராஜன் நாடார், செ.வெள்ளத்துரை நாடார், ஏ.சவுந்தரராஜ் நாடார், ஆர்.பாரதராஜ் நாடார் மற்றும் ஊர் பிரமுகர்கள் செய்திருந்தனர்.
3 நாட்களும் பக்தர்களுக்கு காலை, பகல், இரவு நேரங்களில் நிர்வாகத்தின் சார்பிலும், சென்னை தொழிலதிபர் எஸ்.என். ஜெயமுருகன் ஏற்பாட்டிலும் மற்றும் உபயதாரர்கள் சார்பிலும் உணவு வழங்கப்பட்டன.