மந்தித்தோப்பு கோவில் திருவிழா
மந்தித்தோப்பு கோவில் திருவிழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள மந்தித்தோப்பு கணேஷ் நகர் அய்யா நாராயணசாமி கோவில் 38-வது காட்சி திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அய்யா நாராயணசாமி வாகன பவனி, மற்றும் சந்தனகுடம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.