ரெயில் தண்டவாளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

ரெயில் தண்டவாளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

Update: 2023-01-20 18:45 GMT

நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் பணகுடிக்கும், வள்ளியூருக்கும் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக, ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் நேற்று காலை நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வள்ளியூர் ரெயில்வே புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ரெயில் தண்டவாளத்தையொட்டி உள்ள முட்புதரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் முகத்தை அடையாளம் காணமுடியவில்லை. ரெயிலில் அடிபட்டு 15 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசாரால் கூறப்படுகிறது. அந்த ஆணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்