மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி ஆண்டு விழா

சேரன்மாதேவி கோவிந்தப்பேரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

Update: 2022-06-13 21:47 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேரன்மாதேவி கோவிந்தப்பேரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மாணவர்கள் நன்கு படித்து, நல்ல பதவியை அடைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கல்வி, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவுக்கு கல்லூரி முதல்வர் பூவலிங்கம் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை பேராசிரியர் தெய்வநாயகம் வரவேற்று பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் அருள் செலஸ்டின் பிரேமா நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர்கள் நந்தினிமீனா, தேவகி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்