மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் இன்று(திங்கட்கிழமை) தெப்ப திருவிழா நடைபெறுகிறது.;

Update:2023-07-03 00:15 IST

ராஜகோபாலசாமி

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு உற்சவம் நடக்கும் கோவிலான இங்கு ஆனி மாதம் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். தெப்ப உற்சவ திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் ராஜகோபாலசாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

தெப்ப திருவிழா

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வர்த்தக சங்கத்தினர் நடத்தும் தெப்ப திருவிழா இன்று(திங்கட்கிழமை) ஹரித்ரா நதி தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. இதில் பெருமாள் ருக்மணி, சத்யபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதற்காக தெப்பம் கட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது தெப்பத்தை அலங்கரிக்கும் இறுதிகட்ட பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்கத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்