அவலூர்பேட்டைஅகத்தீஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி
அவலூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. இதில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு முன்பு மன்மதன் சிலை கையில் வில்லுடன் அலங்கரிக்கப்பட்டு வைக்ப்பட்டிருந்து. இரவு 12 மணியளவில் சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். பின்பு சிவபெருமான் கையிலிருந்து அக்னி அம்பு மன்மதன் மீது பட்டவுடன் அந்த சிலை எரிந்தது. அதை தொடர்ந்து சிவபெருமானுக்கு தீபாரதனை காட்டியவுடன் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.