தூத்துக்குடி மாநகராட்சியில்பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகம் தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சியில்பொதுமக்களுக்கு மஞ்சப்பை வினியோகத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-09 14:03 GMT

தூத்துக்குடி மாநகர மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி வாழ்வதற்கும், தூய்மையான தூத்துக்குடி அமையும் வகையிலும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தூய்மையின் அவசியம் குறித்து மாநகராட்சி பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மாசு மற்றும் இயற்கைக்கு முரணான செயல்பாடுகளை களையும் வகையில் மாநகர பகுதிகளில் அமைந்து உள்ள தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் வீடுதோறும் மொத்தம் 5 லட்சம் துணிப்பை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

முதல்கட்டமாக கடலோர பகுதிகளில் அமைந்து உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா 3 பைகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் அபராதம் விதிக்கவும், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று பொதுமக்களுக்கு மஞ்சள்பை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் அருண்குமார், வடக்கு மண்டல சுகாதார அலுவலர் அரிகணேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்