காஞ்சிபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் -மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Update: 2022-06-21 08:23 GMT

காஞ்சிபுரம்,

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.தினசரி பாதிப்பு எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது.இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் என அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் .இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.வணிக வளாகங்களில் குளிர் சாதன வசதி பயன்படுத்தவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்