நாமபுரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்
நாமபுரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
ஆலங்குடியில் தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது குருஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது மங்கள இசை, வாணவேடிக்கைகள் முழங்க பெண்கள் பரதநாட்டியம் ஆடியபடி வீதி உலா முன்பு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.