வரகுணேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை

வரகுணேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

Update: 2022-10-27 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் உள்ள வரகுணேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் கடந்த மாதத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து மண்டல பூஜை விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நான்கு கால பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி நடந்தது. வேத விற்பனர்கள் மேளதாளத்துடன் கும்ப குடங்கள் சுமந்து கோவிலை வலம் வந்து வரகுணேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களான சாலைக்கிராமம், குயவர் பாளையம், சமுத்திரம், முத்தூர், கரும்புக்கூட்டம், துகவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்