தொட்டியம் அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை விழா

தொட்டியம் அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை நடைபெற்றது.

Update: 2022-12-27 19:54 GMT

தொட்டியம் மதுராநகரில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவிலில் மண்டலபூஜை விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அய்யப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது. நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் அய்யப்பனுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பழ வகைகள், தேன், நெய், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மேளதாளத்துடன் வாண வேடிக்கை முழங்க அய்யப்பன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் தொட்டியம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்