விழுப்புரம்ஓம்சாந்த காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை

விழுப்புரம் ஓம்சாந்த காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

Update: 2023-05-07 18:45 GMT


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் ஓம் சாந்த காளியம்மன், கொல்லிமலை கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 48-ம் நாள் மண்டல பூஜையும், 50-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி பூஜையும் நடைபெற்றது. இதையொட்டி வேள்வி பூஜையும், கலச அபிஷேகமும் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோவில் தர்மகர்த்தா சித்தர் அடியார் நிர்மலாபால், பரம்பரை தர்மகர்த்தா சங்கர்கணேஷ், அண்ணாமலை சித்தர், ஞானாநந்தா சித்தர், மண்ணாங்கட்டி சித்தர், சங்கரானந்தா சித்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்