மேலாண்மை குழு கூட்டம்
புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. ஆசிரியை விமலா வரவேற்று பேசினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி புரவலர் சூசன்னா, பள்ளி வளர்ச்சிக்குழு உறப்பினர்கள் ஆனந்த், தர்மராஜ், ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.