மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-01-27 18:56 GMT

பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா சோமுர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 58). இவர் கடந்த 2020-ம் ஆண்டு காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த மனவளர்ச்சி குன்றிய 27 வயது பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சல் போட்டார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, அர்ஜுனனை பிடித்து கரூர் அனைத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஜுனனை கைது செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில், வழக்கிற்கான தீர்ப்பை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு வழங்கினார். இதில், மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த அர்ஜுனனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அர்ஜுனன் சிறையில் அடைக்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்