கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் கைது

கொலை முயற்சி வழக்கில் 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-19 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 8 பேர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் உள்ளிக்கோட்டையை சேர்ந்த செல்லபாண்டியன் (வயது 48) என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து செல்லபாண்டியன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் செல்லபாண்டியன் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளார். அப்போது செல்லபாண்டியனை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து பரவாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சென்னை சென்ற பரவாக்கோட்டை போலீசாரிடம் செல்லபாண்டியனை ஒப்படைத்தனர். இதையடுத்து பரவாக்கோட்டை போலீசார் செல்லபாண்டியனை கைது செய்து மன்னார்குடியில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மன்னார்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்