பாலத்தில் இருந்து தவறி விழுந்து இளநீர் வியாபாரி சாவு

பாலத்தில் இருந்து தவறி விழுந்து இளநீர் வியாபாரி இறந்தார்.

Update: 2022-06-12 19:37 GMT

திருவையாறு:-

திருவையாறு அருகே ஆவிக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது46). இவர் அரசூர் மெயின்ரோட்டில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு அரசூர் மெயின்ரோட்டில் உள்ள முருகன் கோவில் அருகே வாய்க்கால் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது படுத்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு சென்று சிவானந்தம் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவானந்தம் மனைவி அமுதா (43) கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்