மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தவர் இறந்தார்.;

Update: 2022-10-18 18:33 GMT

இலுப்பூர் அருகே கருத்தப்பவயல் முள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 50). இவர், தனது மோட்டார் சைக்கிளில் இலுப்பூர்- கட்டையகாரன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கிருஷ்ணமூர்த்தி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்