ரெயில் மோதி கொத்தனார் பலி

தஞ்சையில் ரெயில் மோதி கொத்தனார் பலியானார்.

Update: 2022-11-27 19:32 GMT

தஞ்சையில் ரெயில் மோதி கொத்தனார் பலியானார்.

கொத்தனார்

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி வனதுர்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் விஜய் (வயது 25). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தனது செல்போனில் ஹெட்போனை இணைத்து கொண்டு பேசியப்படியே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் விஜய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்