கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது

கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 18:03 GMT

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவி ராஜா (வயது 21). இவர் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் திருச்சியை சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவிக்கும், சஞ்சீவி ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் அந்த மாணவி மற்றும் சஞ்சீவிராஜா ஆகியோர் கும்மிடிப்பூண்டியில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று அழைத்து வந்தனர். அப்போது அந்த மாணவி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சஞ்சீவிராஜா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த மாணவி பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்